Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராட்டுகளைக் குவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் & கதிர் நடித்த ‘சுழல்’ வெப் சீரிஸ்

Advertiesment
பாராட்டுகளைக் குவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் & கதிர் நடித்த ‘சுழல்’ வெப் சீரிஸ்
, திங்கள், 20 ஜூன் 2022 (08:32 IST)
அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியான சுழல் வெப் தொடர் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சூழல் அமேசான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியானது. இந்த தொடரை ‘விக்ரம் வேதா’ புகழ் புஷ்கர் & காயத்ரி எழுத, பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இயக்கியுள்ளனர். ஒரு சிறு நகரத்தில் காணாமல் போகும் பெண்ணை தேட துவங்கும்போது ஏற்படும் பயங்கரமான விளைவுகளை திரில்லராக உருவாக்கியுள்ளதாக சொல்லபடுகிறது. முன்னணிக் கலைஞர்கள் இருப்பதால் இந்த தொடர் கவனத்தை ஈர்த்த ஒன்றாக அமைந்துள்ளது. மொத்தம் 8 எபிசோட்களாக இந்த சீரிஸ் உருவாகி உள்ளது.

வெளியானது முதல் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளை இந்த சீரிஸ் பெற்று வருகிறது. ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் தொடரின் 8 எபிசோட்களையும் பார்த்துவிட்டு தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!