Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமேசான் ப்ரைமில் ரிலீஸான ‘சுழல்’… முதள் ஆளாக பாரட்டிய தனுஷ்!

Advertiesment
அமேசான் ப்ரைமில் ரிலீஸான ‘சுழல்’… முதள் ஆளாக பாரட்டிய தனுஷ்!
, சனி, 18 ஜூன் 2022 (15:21 IST)
அமேசான் ப்ரைம் வீடியோவில் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது சுழல் வெப் தொடர்.

கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சூழல் அமேசான் பிரைம் வீடியோவில் நேற்று வெளியானது. இந்த தொடரை ‘விக்ரம் வேதா’ புகழ் புஷ்கர் & காயத்ரி எழுத, பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இயக்கியுள்ளனர். ஒரு சிறு நகரத்தில் காணாமல் போகும் பெண்ணை தேட துவங்கும்போது ஏற்படும் பயங்கரமான விளைவுகளை திரில்லராக உருவாக்கியுள்ளதாக சொல்லபடுகிறது. முன்னணிக் கலைஞர்கள் இருப்பதால் இந்த தொடர் கவனத்தை ஈர்த்த ஒன்றாக அமைந்துள்ளது. மொத்தம் 8 எபிசோட்களாக இந்த சீரிஸ் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த சீரிஸைப் பற்றி பாராட்டி நடிகர் தனுஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு சிறப்பான கிரைம் திரில்லர். ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை கட்டிப்போடும் ஒரு தொடர். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்” எனப் பாராட்டியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல் வலிக்கு சிகிச்சை எடுத்த பிரபல நடிகை… முக அமைப்பே மாறியதில் அதிர்ச்சி!