Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெட்டவங்க மட்டும் இல்ல… யார் வேணும்னாலும் கொல பண்ணலாம்… எப்படி இருக்கிறது சுழல் 2 டிரைலர்?

Advertiesment
கெட்டவங்க மட்டும் இல்ல… யார் வேணும்னாலும் கொல பண்ணலாம்… எப்படி இருக்கிறது சுழல் 2 டிரைலர்?

vinoth

, வியாழன், 20 பிப்ரவரி 2025 (08:12 IST)
கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சூழல் அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஆம் அனடு வெளியானது. இந்த தொடரை ‘விக்ரம் வேதா’ புகழ் புஷ்கர் & காயத்ரி எழுத, பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இயக்கி இருந்தனர்.

ஒரு சிறு நகரத்தில் காணாமல் போகும் பெண்ணை தேட துவங்கும்போது ஏற்படும் பயங்கரமான விளைவுகளை திரில்லராக உருவாக்கியுள்ளதாக சொல்லபடுகிறது. முன்னணிக் கலைஞர்கள் இருப்பதால் இந்த தொடர் கவனத்தை ஈர்த்த ஒன்றாக அமைந்துள்ளது. மொத்தம் 8 எபிசோட்களாக இந்த சீரிஸ் உருவாகி இருந்தது.

வெளியானது முதல் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளை இந்த சீரிஸ் பெற்ற இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் தற்போது தயாராகி உள்ளது. முதல் சீசனை போலவே இந்த சீசனும் ஒரு கோயில் திருவிழாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசனில் நடந்த கொலைகளுக்குக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் சில கொலைகள் நடக்க அதன் முடிச்சை அவிழ்த்தனரா அல்லது இன்னும் தேடல் இன்னும் குழப்பமாகிக் கொண்டே போகிறதா என்பதுதான் இரண்டாவது சீசனில் இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. இந்த சீசன் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸாகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி வி பிரகாஷ்& சைந்தவி விவாகரத்தில் என்னை பெண்கள் டார்கெட் செய்கிறார்கள்.. திவ்யபாரதி வருத்தம்!