Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுஷாந்த் இருந்தால் சிறைக்குச் சென்றிருப்பார் - முன்னணி நடிகை டூவிட் ! திட்டும் ரசிகர்கள்

Advertiesment
Taapsee Pannu
, புதன், 9 செப்டம்பர் 2020 (15:44 IST)
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இது அப்போது வாரிசு அரசியல் என்று பேச்சு எழுந்தது. இதனால் கங்கனா ரனாவத் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். சிலரை விமர்சித்து வருகிறார். சுஷாந்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ரியா சுஷாந்திற்கு போதைப் பொருள் கொடுத்ததாகவும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு கொண்டிருந்ததற்காகவும் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க நடிகை டாப்ஸி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்நேரம் சுஷாந்த் உயிருடன் இருந்திருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என்று பதிவிட்டுள்ளார் இது சர்ச்சையாகி வருகிறது.
 
webdunia

சுஷாந்திற்கு ரியாதான் தேனிரில்  போதைப் பொருள் கலந்து கொடுத்தார் என தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதார் மாதவன் - இணையத்தில் சூப்பர் வைரலாகும் வீடியோ!