Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைனில் ரிலீஸாகிறது சுஷாந்த் சிங்கின் கடைசி படம்!

Advertiesment
Cinema
, வியாழன், 25 ஜூன் 2020 (15:04 IST)
மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில் அவரது அஸ்தி கடந்த வாரம் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து வெளியாக தயாராக உள்ள படம் “தில் பேச்சாரா”. இந்த படம் மே மாதமே ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாவதாக செய்திகள் வெளியான நிலையில் சுஷாந்த் சிங் ரசிகர்கள் மற்றும் பலர் இந்த படம் தியேட்டரில் வெளியாவதுதான் சுஷாந்த் சிங்கிற்கு நாம் செய்யும் மரியாதை என கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என்பதே தெரியாத சூழல் உள்ளதால் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு கட்டுக்கடங்காத அதிதி ராவ் ஹைதாரி