சுசீந்திரனின் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் படம்

வெள்ளி, 1 ஜூன் 2018 (11:51 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சாம்பியன்’, அவருடைய மூன்றாவது ஸ்போர்ட்ஸ் படமாகும்.
சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸான இந்தப் படம், சரியாகப் போகவில்லை. ஏற்கெனவே வெளியான சுசீந்திரன் படங்களை ஒன்று சேர்த்தது போல் இருக்கிறது என்ற விமர்சனம் வந்தது.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஏஞ்சலீனா’, ‘ஜீனியஸ்’ என இரண்டு படங்களை எடுத்துள்ளார் சுசீந்திரன். இரண்டிலுமே புதுமுகங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘சாம்பியன்’ என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார் சுசீந்திரன்.

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’ படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் படம் இது. கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில், ரோஷன் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷின் உறவினர். டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ‘அஞ்சாதே’ நரேன், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் டிசம்பரில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் “வில்லனாக நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்” - பாபி சிம்ஹா