சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இவர் இந்தியாவிலேயே அதிகளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆவார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யவம்சி என்ற படம் சமீபத்தில் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்தியாவில் மட்டும் 5000 தியேட்டர்களில் ரிலீசானது.
 
									
										
			        							
								
																	உலகெங்கிலும்  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யவம்சி#Sooryavanshi  படம் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக 4 வாரங்களில் இப்படம் 191. 35 கோடி வசூலீட்டியுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  
									
											
									
			        							
								
																	
	 
	மேலும் இப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தை ரோஹித் ஷெட்டி, ஹிரோ ஜோகர், கரன் ஜோகர், அருணா பாட்டார், அபூர்வா மேக்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	இப்படத்திற்கு எஸ்.தமன், ஹிமேஸ் ரேஸ்மியா,அமர் மோஹிலே மற்றும் தனிஸ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.