கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு தனி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம், குஜராத், கர்நாடகா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய மாவட்ட விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
1. தமிழகம் - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர்
2. குஜராத் - அகமதாபாத், சூரத், பெலகவி
3. கர்நாடகா - பெங்களூரு, கல்புரகி, உடுப்பி
4. தெலங்கானா - ஹைதராபாத், மெட்சல்-மல்காஜ்கிரி
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,880 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107,109 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு குறித்து பார்க்கையில் சென்னையை தொடர்ந்து திருவள்ளூர்- 388, தேனி- 351, செங்கல்பட்டு - 319, ராணிப்பேட்டை- 253 ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புகளை நாளுக்கு நாள் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.