Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

vinoth
சனி, 5 ஏப்ரல் 2025 (09:43 IST)
சூர்யா நடிப்பில் உருவான  ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் இப்போது சூர்யா குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கட் அட்லூரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படம் இளைஞர்களைக் கவரும் விதமாக முழுக்க முழுக்க ஒரு காதல் படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மிகக் குறுகிய நாட்களில் வாடிவாசல் படத்துக்கு முன்பாகவே சூர்யா இந்த படத்தில் நடித்து முடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

டிரைலருக்கு நடுவுல Reference இல்ல.. Reference நடுவுலதான் டிரைலரே… எப்படி இருக்கு GBU டிரைலர்?

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments