Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

vinoth
சனி, 5 ஏப்ரல் 2025 (09:39 IST)
விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான ‘சச்சின்’ திரைப்படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த படத்தை மீண்டும் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தை, பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்தார். இப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, நினைவில் நிலைக்கும் பாடல்களை வழங்கியுள்ளார். சச்சின் படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை.ஆனால் விஜய் மற்றும் வடிவேலுவின் காமெடிக் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன.

ஏப்ரல் 18 ஆம் தேதி சச்சின் திரைப்படம் ரி ரிலீஸாகிறது. சுமார் 100 திரைகளுக்கு மேல் ரிலீஸாகவுள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்போது அதே தேதியில் ரஜினியின் ‘தளபதி’ படத்தையும் ரி ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments