Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் தொடங்கும் முன்னரே விற்பனை ஆன ‘சூர்யா 46’ வின் ஓடிடி உரிமம்…!

vinoth
சனி, 3 மே 2025 (08:15 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் ரிலீஸானது.

படம் வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நிறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவுக்கு ‘ஒரு திரையரங்க ஹிட்டாக’ இந்த படம் அமைந்துள்ளது.

இதையடுத்து சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கும் சூர்யாவின் 46 ஆவது படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடியவுள்ளதாம். இந்தப் படத்தை லக்கி பாஸ்கர் புகழ் வெங்கட் அட்லூரி இயக்குகிறார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது மிருனாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தைப் பெரும் தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments