Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகன் படத்தில் என்னை அவமதித்துவிட்டார்கள்… பிரபல நடிகை புலம்பல்!

vinoth
சனி, 3 மே 2025 (08:09 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். இப்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படக்குழுவினர் தன்னை அவமதித்து  விட்டதாக பிரபல நடிகை சனம் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார். அதில் “விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்க ஆசைப்பட்டு முயற்சி செய்தேன். அந்த படத்தில் பணியாற்றும் உதவி இயக்குனர் ஒருவர் என்னை நான்கு மாதங்கள் காக்கவைத்து ஏமாற்றிவிட்டார். இதை விஜய்யின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக வெளிப்படுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டில் பாதிக்கும் மேல்..!

எத்தனை படம் நடிச்சிருந்தாலும்.. அதுதான் என் மனசுக்கு பிடிச்ச படம்! - அஜித்குமார்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

என்னது விராட் கோலி பயோபிக்கில் சிம்பு நடிக்கிறாரா?... தீயாய்ப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments