Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படத்தின் அடுத்த பாடல் நாளை ரிலீஸ்....இசையமைப்பாளர் டுவீட்...ரசிகர்கள் மகிழ்ச்சி !!

சூர்யா படத்தின் அடுத்த பாடல் நாளை ரிலீஸ்....இசையமைப்பாளர் டுவீட்...ரசிகர்கள் மகிழ்ச்சி !!
, திங்கள், 9 நவம்பர் 2020 (19:18 IST)
’’சூரரைப் போற்று ‘’ படத்தின் சாகியே என்ற பாடல் நாளை  ரிலீசாக உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் பல கட்ட தாமதத்திற்குப் பின் வரும் நவம்பர் 14 ஆம் தேதி 
அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெய்யோன் சில்லி, காட்டுப் பயலே, ஆகாசம் உள்ளிட்ட மூன்று பாடல்கள் ரிலீசான நிலையில், சமீபத்தில் சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அடுத்த பாடல் வெளியானது.
webdunia

இந்நிலையில் நாளை இப்படத்தின் சாகியே என்ற பாடல் ரிலீசாக உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  எனது குரலில் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடலான #சகியே #உசுரே நாளை ரிலீசாகிறது. உங்கள் இதயத்தைத் தொடும் விதத்தில் அமையும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் மொத்தப் பாடல்களின் ஆல்பமும் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூக்குத்தி அம்மன் ஆசியால் வெற்றி பெற்ற ஜோ பிடன்! ஆர் ஜே பாலாஜி விளம்பரம்!