Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது எல்லா படத்திலும் அவர் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் – சுதா கொங்கரா பாராட்டிய நடிகர்!

எனது எல்லா படத்திலும் அவர் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் – சுதா கொங்கரா பாராட்டிய நடிகர்!
, திங்கள், 9 நவம்பர் 2020 (18:13 IST)
சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் துரோகி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. ஆனால் இவர் மீது கவனம் பெற வைத்த திரைப்படம் என்றால் அது இறுதிச் சுற்றுதான். அதன் பின்னர் அவர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் காளி வெங்கட் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரின் நடிப்பை பற்றி பேசியுள்ள சுதா ‘என்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு நடிகரைப் பார்த்ததில்லை. சூரரைப் போற்று திரைப்படத்தில் ஒரு பக்க வசனத்தைப் படித்து அப்படியே அவர் சூர்யாவுக்கு சொல்லி கொடுத்தார். அவர் சொன்ன டயலாக்குகளை அப்படியே உள்வாங்கி நடித்தார் சூர்யா. என் எல்லாப் படத்திலும் காளி வெங்கட் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாத்ரூமில் செல்பி எடுத்து வைரலாக்கிய சிம்பு பட நடிகை!