காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

vinoth
வியாழன், 20 நவம்பர் 2025 (10:52 IST)
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் படக்குழு மேல் அதிருப்தியில் அவ்வபோது பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதமாக சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடலான ‘God mode’ பாடல் வெளியானது. இன்னும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் முடியாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான காந்தாரா-1 படம் பெற்ற அளப்பரிய வெற்றியை அடுத்து கருப்பு படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிக்கு ஏற்றவாறு தற்போது மேலும் சிலக் காட்சிகளையும் மாற்றுகின்றனராம். இதற்காக சூர்யா மீண்டும் மூன்று நாட்கள் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

அடுத்த கட்டுரையில்
Show comments