தமிழில் பிரபல நடிகர்களாக இருந்த சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இதனால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்த ஜோதிகா இல்லற வாழ்வில் ஈடுபட்டார். சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் மும்பையில் படித்து வருகின்றனர்.
அதற்காக சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் மும்பைக்குக் குடியேறியுள்ளனர். இந்நிலையில் சூர்யா மகள் தியா leading Light என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இந்தி சினிமாக்களில் பணியாற்றும் லைட் வுமன்கள் பற்றிய ஆவணப்படம் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் விதமாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செலஸ் நகரில் உள்ள ரீஜென்ஸி திரையரங்கில் ஒரு வார காலம் திரையிடப்படுகிறது.