தமிழ் திரையுலகின் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இயக்கத்தில் உருவான அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.
பொங்கலுக்கு ரிலீஸான இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதையடுத்து ரவிகுமார் இப்போது அடுத்து இயக்கும் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே ரவிகுமார் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆனார். ஆனால் ரவிகுமார் சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த படம் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரவிகுமார் தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை விஜய் சேதுபதிக்குப் பிடித்துள்ளதால் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.