Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ‘கங்குவா’ ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!

Siva
வியாழன், 18 ஜூலை 2024 (20:32 IST)
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படம் 10 மொழிகளில் உருவாகி வருவதாகவும் ஓடிடியில் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவின் படங்களிலேயே இந்த படம் தான் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் என்பதும் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் ‘கங்குவா’ படத்தின் சிங்கிள் பாடல் ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்களுக்கு இந்த பாடல் ஒரு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அதை மட்டும் நிரூபித்தால் சினிமாவை விட்டே விலகத் தயார்… வனிதா விஜயகுமார் சவால்!

அமெரிக்காவில் செம்ம ஹிட்டடித்த ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

இன்னும் 50 நாட்கள்… ரிலீஸ் குறித்த அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்