Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயக்குனர் அவதாரம்.. ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப்போர்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Prasanth Karthick
வியாழன், 18 ஜூலை 2024 (18:38 IST)

தமிழில் பிரபல நடிகராக உள்ள ஹிப்ஹாப் ஆதி தானே இயக்கி நடிக்கும் கடைசி உலகப் போர் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த முதல் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தை இவரே இயக்கி, நடித்தும் இருந்தார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தவர் நீண்ட காலம் படம் நடிக்காமல் இருந்து, பின்னர் சமீபத்தில் ‘பிடி சார்’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து ஹிட்டும் கொடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து நீண்ட காலம் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. தானே எழுதி இயக்கி நடிக்கும் தனது அடுத்த படத்திற்கு ‘கடைசி உலகப்போர்’ என பெயரிட்டுள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைக்கிறார். 

இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் ஆதி ”இந்த படம் ஒரே நோக்கத்தை இலக்காக கொண்ட ஒரு நண்பர்கள் கூட்டத்தின் கதை” என்று கூறியுள்ளார். நாளை இதன் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவித்துள்ளார். காமெடியுடன், சமூக அக்கறை கொண்ட கருத்துகளையும் பேசுபவர் ஹிப்ஹாப் ஆதி. அதனால் இந்த படம் குறித்தும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments