வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (14:15 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ‘வாடிவாசல்’ தற்போது தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதற்குக் காரணம் சூர்யாதான் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா தற்போது குறுகியக் கால படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கியுள்ளார். அதனால் வாடிவாசல் படத்தில் நடித்தால் அதிக நாட்கள் அந்த படத்துக்குத் தேதிகள் கொடுக்கவேண்டும் என்பதால் தற்போதைக்கு இந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

சென்சார் செய்யப்பட்ட பாகுபலி –The Epic… ரன்னிங் டைம் விவரம்!

பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நிவின் பாலி… வைரலாகும் புகைப்படம்!

ஒன்பது மாத காதல் முடிவுக்கு வருகிறதா?… பிரிகிறார்களா டாம் க்ரூஸும் அனா டி ஆர்மாஸும்…!

பைசன் திரைப்படம் பார்த்து வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments