Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு!

சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு!
, வியாழன், 22 ஜூலை 2021 (18:12 IST)
சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு!
நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று அவர் நடித்து வரும் சூர்யா 40 படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது
 
அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று அறிவிக்கப்பட்டு வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அட்டகாசமாக சூர்யா கையில் வாளை எடுத்துக் கொண்டு கம்பீரமாக நிற்பது நிற்கும் காட்சிகள் உள்ளன
 
இதனை சூர்யாவின் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எதற்கும் துணிந்தவன் என்ற டைட்டில் அட்டகாசமாக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
சூர்யா, பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா!