எங்கப்பா தினமும் 500 ரூபாதான் பாக்கெட்மணி கொடுப்பார்… ட்ரோல்களுக்கு இரையான சூர்யா விஜய் சேதுபதி!

vinoth
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (09:32 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  Phoneix (வீழான்) என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்து நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வரும் சூர்யா, சமீபத்தில் தான் சொல்லிய ஒரு கருத்துக்காக ட்ரோல்களில் சிக்கியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் “தினமும் என் அப்பா எனக்கு 500 ரூபாய்தான் பாக்கெட் மணி தருவார். அதைவைத்துதான் நான் தினசரி செலவு செய்துகொள்வேன்” எனக் கூறியுள்ளார். “ஏன்ப்பா ஸ்கூல் பையனான உனக்கு ஐநூறு –வே ஓவராச்சே” எனக் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments