Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவுடன் முதல் முறையாகக் கூட்டணி அமைக்கும் அனிருத்!

சிம்புவுடன் முதல் முறையாகக் கூட்டணி அமைக்கும் அனிருத்!

vinoth

, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (09:21 IST)
சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இன்னும் சிம்பு 48 படம் தொடங்கவில்லை. இதற்கிடையில் அவர் வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதில் டைனோசர்ஸ் பட இயக்குனர் எம் ஆர் மாதவன், 2018 பட இயக்குனர் ஜுட் ஆண்டனி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒருவேளை அனிருத் சம்மதிக்கும் பட்சத்தில் சிம்புவுடன் அவரது முதல் படமாக இது இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமல், யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது!!