Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மகன் நடிகர் ஆகக் கூடாதா?... மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சூர்யா விஜய்சேதுபதி!

vinoth
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (15:24 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தகவல் படக்குழுவால் உறுதிப் படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  Phoneix (வீழான்) என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் அவரிடம் சினிமா நடிகர்களின் மகன்கள் நடிக்க வருவது குறித்து கேட்டபோது “ஏன் ஒரு டாக்டரின் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸின் மகன் போலீஸ் ஆகலாம். ஆனால் நடிகரின் மகன் நடிகர் ஆகக் கூடாதா?” என ஆவேசமாகப் பேசியுள்ளார். தற்போது அவரது இந்த பேச்சும் சமூகவலைதளங்களில் ட்ரோல்களை சந்திக்க தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அடுத்தவங்க துக்கத்திலும் காசு பார்த்தே ஆகணுமா? - ஊடகங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதம்!

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments