இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சில நாட்கள் நடைபெற்ற வணங்கான் திரைப்படத்தின் ஷுட்டிங் பின்னர் நிறுத்தப்பட்டது.
நாச்சியார் படத்துக்குப் பின்னர் இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போது வணங்கான் திரைப்படத்தின் மொத்தக் கதையையும் இயக்குனர் பாலா மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கனவே எடுத்தக் காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.