புறநானூறு படத்துக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது… அப்டேட்டை வெளியிட்ட சூர்யா & சுதா கொங்கரா!

vinoth
செவ்வாய், 19 மார்ச் 2024 (08:23 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது.இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர். இந்த படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு இறுதியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இது சம்மந்தமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments