சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா,''பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது''என்று பேசினார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு, அகரம் அறக்கட்டளை சார்பாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் EMPOW HER-2024 என்ற சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. ஆனால், 5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது. அவர்களை இன்னும் மேலே கொண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.