சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் அதிரடி சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே பட்ஜெட்டின் பாதிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படம் ஒரே நாளில் ரூ.46 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.17 கோடி வசூல் ஆனதாக கூறப்படுகிறது.
இது சூர்யாவின் திரைப்படங்களில் முதல் நாளிலேயே ஏற்பட்ட மிகப்பெரிய வசூல் சாதனையாகும். இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.65 கோடி என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆனதால், தயாரிப்பாளர்களுக்கு முதல் நாளிலேயே நல்ல லாபம் சம்பாதித்துள்ளனர்.
மேலும், வார இறுதி விடுமுறை உள்ளிட்ட நான்கு நாட்களில் படம் ரூ.100 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுக்கு இது மிகப்பெரிய வெற்றிப் படம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.