Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா - ஆர்ஜே பாலாஜி படத்தின் டைட்டில் இதுதான்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (10:20 IST)
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த சூர்யாவின் 45-வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
சூர்யாவின் 45-வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை, ஒரு நீதிமன்ற வழக்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சாய் அபிநயங்கார் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் தலைப்பு 'கருப்பு' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில், அந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
முன்னதாக இந்த படத்திற்கு 'வேட்டை கருப்பு' என்ற டைட்டில் வைக்கப்படுவதாக செய்திகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments