Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக தாய்லாந்து சென்றடைந்த கங்குவா படக்குழு…!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (14:38 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக படக்குழு தாய்லாந்து சென்றடைந்துள்ளது. அங்கு 25 நாட்கள் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோடு இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments