Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளோடு காரில் சென்ற போது விபத்து… பாடகி சின்மயி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (14:33 IST)
தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்மயி. அந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

சின்மயி சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடிகர் ராகுலை மணந்துகொண்டார். ராகுல் மாஸ்கோவின் காவிரி மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர்களுக்கு கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.  அந்த குழந்தைகளுக்கு திரிபத் & ஷர்வாஸ் என்று பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நிலையில் அந்த குழந்தைகளோடு தனது காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாகவும், அந்த ஆட்டோ ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த விபத்தில் தனக்கும் குழந்தைகளுக்கும் எந்த அடியும் படவில்லை எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments