Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Goosebumps எண்ட்ரி…. சூர்யா கதாபாத்திரம் இதுதான் – விக்ரம் படத்தைக் கொண்டாடிய ரசிகர்கள்!

Goosebumps எண்ட்ரி…. சூர்யா கதாபாத்திரம் இதுதான் – விக்ரம் படத்தைக் கொண்டாடிய ரசிகர்கள்!
, வெள்ளி, 3 ஜூன் 2022 (13:29 IST)
சூர்யா விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது.

இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் அவரின் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘சூர்யா இடம்பெற்றிருக்கும் விக்ரம் படத்தின் போஸ்டர்’ ஒன்றைப் பகிர இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகி விட்ட நிலையில் சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. படத்தின் இறுதியில் 10 நிமிடங்கள் தோன்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதார். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் முன்னதாகவே வெளியாகும் Thor Love and Thunder! – திடீரென அறிவித்த மார்வெல்!