Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

Mahendran
வெள்ளி, 30 மே 2025 (17:54 IST)
சூரி, சந்தானம் ஆகிய இருவருமே தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த நிலையில், தற்போது இருவருமே ஹீரோவாகிவிட்டனர். இந்த நிலையில், ஹீரோவாக சந்தானத்தை சூரி முந்திவிட்டதாகவே கருதப்படுகிறது.
 
ஒரே நாளில் சூரியின் 'மாமன்' மற்றும் சந்தானத்தின் 'டி.டி.3' வெளியான நிலையில், 'மாமன்' திரைப்படம் தான் அதிக வசூல் பெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, 'மாமன்' படத்திற்கு சூரி எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும், ஆனால் 'டி.டி.3'  திரைப்படத்திற்கு சந்தானம் ஐந்து கோடி மட்டுமே சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ஹீரோவாக சந்தானத்தை சூரி மிஞ்சினாலும், இன்னும் காமெடியனாக சந்தானம் தான் சூரியை விட உயரத்தில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. எஸ்.டி.ஆர் 49 படத்தில் காமெடியனாக சந்தானம் நடிப்பதற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியிருப்பதாக தெரிகிறது.  அதேபோல் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதற்கும் அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
எனவே, இனிமேல் சந்தானம் ஹீரோவாக நடிப்பதற்கு பதிலாக, காமெடியனாகவே தொடர்ந்து நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிகொட்டி வழுக்கைத் தலையுடன் காணப்படும் பிரபாஸ்… புகைப்படம் உண்மையா?

பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கவேண்டும்- நீதிமன்றம் உத்தரவு!

பிரதீப் ரங்கநாதனின் ‘டயூட்’ படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு பெரிய டிமாண்ட்டா?

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments