Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?

Siva
வெள்ளி, 30 மே 2025 (17:42 IST)
அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒன்லைன் கதை கூறிய தனுஷ், விரைவில் நேரில் சந்தித்து முழு கதையை கூற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இருவரும் சந்திக்க முடியாத சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
 
அஜித் சென்னை வந்த போது, தாய்லாந்துக்கு தனுஷ் படப்பிடிப்புக்கு சென்று விட்டதாகவும், தாய்லாந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு தனுஷ் சென்னை வந்த போது, அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், அஜித்–தனுஷ் சந்திப்பு இதுவரை நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
 
ஆனால், அதே நேரத்தில் அஜித் ஒரு குறிப்பிட்ட தேதியை தனுஷிடம் சொல்லி, "அந்த தேதியில் தான் துபாயில் இருப்பேன்; முடிந்தால் வந்து சந்திக்கவும்" என்று தகவல் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
எனவே, இன்னும் சில நாட்களில் அஜித்–தனுஷ் சந்திப்பு துபாயில் நடக்கும் என்றும், அப்போது தனுஷ் முழு கதையையும் அஜித்துக்கு கூறுவார் என்றும் புறப்படுகிறது.
 
இருப்பினும், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பிறகு வரும் படத்தை ஒரு வேலை அஜித் ஒப்புக்கொண்டால்  தனுஷ் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments