Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''சூர்யா 42'' படம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை? ரசிகர்கள் மகிழ்ச்சி

surya 42
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (22:26 IST)
நடிகர் சூர்யா  நடிப்பில் உருவாகி வரும் சூர்யா42 படத்தின் விற்பனை  பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேசன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தில் நடிகை திஷா பத்தானி, ஆந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில்,  நடிகர் சூர்யா 13 வேடங்களில் நடித்துள்ளார்.

சரித்திரப் படமாக 3 டியில்  உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் வெளியாகும் முன்பே  விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

அதன்படி, சூர்யா 42 படத்தின் சாட்டிலைட் ,  திரையரங்க உரிமை, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை ரூ.100 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதை பிரபல நிறுவனமான  பென் ஸ்டுடியோஸ் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''சுவாமியே சரணம் ஐயப்பா''... நடிகர் ஜெயம் ரவி பதிவிட்ட புகைப்படம் வைரல்