Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை சமந்தாவுக்கு ஆதரவு

நடிகை சமந்தாவுக்கு ஆதரவு
, சனி, 9 அக்டோபர் 2021 (16:51 IST)
நடிகை சமந்தா தன் மீது பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதற்கு பிரபல நடிகைகள் ஆதரவு அளித்துள்ளனர்.

சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யா விவாகரத்து செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து சமந்தா குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பி வந்ததை அடுத்து அதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து நிற்பவர்களுக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பதே ஒரு வேதனையான செயல். நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. என்னை பற்றி இப்படி வதந்திகளை பரப்புவது இரக்கமற்றதாகும். ஆனால் இதற்கு பின்பும் என்னை பற்றி எதுவும் பேச நான் அனுமதிமாட்டேன் ‘ என்று கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவின் அறிக்கைக்கு பிரபல நடிகைகளான ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர்  சமந்தா நீங்கள் உறுதியோடு இருங்கள் என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த தாய் உயிர்த்தெழுவார் என காத்திருந்த மகள்கள்!