இறந்த தாய்க்கு மீண்டும் உயிர்வந்துவிடும் என மகள்கள் ஜெபம் செய்து 7 நாட்களாக காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள சொக்கம் பட்டி என்ற பகுதியில் வசிந்து வந்தவர் மேரி. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவருக்கு இரு மகள்கள். இருவருக்கும் நாற்பது வயதைக் கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை .
சில நாட்களாக உடல்நலக் குறைவாக அவதிப்பட்ட மேரி அண்மையில் இறந்தார். ஆனால், அவரை உடலை அடக்கம் செய்யாமல் மகள்கள் இருவரும் தாய் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என ஜெபம் செய்து காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, மேரியின் உடல் அழுகி யிருந்தது.
உடனே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.