மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவர் தமிழில் ஆனந்தம், எதிரும் புதிரும், தளபதி, அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மம்முட்டி நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நம்பர் 1.
இப்படத்தை ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படதின் டிரைலர் நாளை ( ஜூலை 2) ஆம் தேதி காலை 10 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.