Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' டீசர் விமர்சனம்

Advertiesment
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' டீசர் விமர்சனம்
, வெள்ளி, 2 மார்ச் 2018 (05:41 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் டீசர் டிசம்பர் 2ஆம் தேதி வெளியகும் என்று தனுஷ் அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை சரியாக 12 மணிக்கு வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ரஜினியின் ஸ்டைல், நானா படேகரின் வில்லத்தனம், சந்தோஷ் நாராயணனின் அட்டகாசமான பின்னணி இசை, ரஞ்சித்தின் சமூக கருத்துக்களுடன் கூடிய வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் ஆகியவை இந்த டீசரின் முக்கிய அம்சங்களாக உள்ளது.

'காலா'ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்'
'கருப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு, அழுக்கு அத்தனையும் உன்னை மாதிரி இருக்கும்'
தில் இருந்தா மொத்தமா வாங்க, ஆகிய வசங்கள் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி பொதுவான ஆடியன்ஸ்களுக்கும் பிடிக்கும் வசனங்கள்

மேலும் பிரபல பாப் பாடகர் யோகி பி குரலில்,
'வா உன்னையும் மண்ணையும் வென்று வா நீ...
ராதவோர் தேவையைக் கொண்டு வா நீ...
ஆயிரம் ஆண்டுகள் போதுமேயுன்...
ராகமே மாறுவாய் சீறுவாய்'

என்ற பாடல் ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த அட்டகாசமான விருந்து.

மொத்தத்தில் 'காலா' டீசர், இன்னும் சில நாட்களுக்கு சமூக வலைத்தளங்களை வைரலாக்கும் டீசர் என்பதை சொல்ல தேவையில்லை.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீதேவியை விட குறைவான சம்பளம் வாங்கிய ரஜினி!