Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்
, புதன், 28 பிப்ரவரி 2018 (22:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நேரத்தில் திடீரென ஒரு செய்தி அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் சற்றுமுன் தனது டுவிட்டரில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். இதன்படி காஞ்சி பெரியவர் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து நாளை வெளியாகவிருந்த 'காலா' படத்தின் டீசர், மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் இதனால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனுஷின் இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் தலைவர் ரஜினிக்காக இன்னும் ஒருநாள் காத்திருப்பதில் தங்களுக்கு த்ரில்தான் என்றும் அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரபல நடிகர் மானநஷ்ட வழக்கு..