Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் ! – இந்தி இயக்குனர் பிராத்தனை !

Advertiesment
சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் ! – இந்தி இயக்குனர் பிராத்தனை !
, திங்கள், 3 ஜூன் 2019 (11:06 IST)
இந்த ஆண்டு வெளியான படங்களில் கவனம் ஈர்த்த படமான சூப்பர் டீலக்ஸ் இப்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் ரிலிஸான சூப்பர் டீலக்ஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கலவையான வரவேற்பைப் பெற்றது. ஆரண்யகாண்டம் திரைப்படத்தை இயக்கி 8 ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

அனுராக் காஷ்யப் போன்ற பாலிவுட் கலைஞர்கள் படத்தைப் பார்த்துவிட்டு படத்தினைப் பாராட்டியதை அடுத்து இந்தி சினிமா ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்க இருப்பதாகவும் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருவதாகவும் தெரிகிறது.

வட அமெரிகாவின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான மாண்ட்ரீல் நகரில் நடைபெறவுள்ள ஃபேண்டசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இதில் முக்கியமானப் பல ஹாலிவுட் படங்களோடு சூப்பர் டீலக்ஸும் திரையிடப்படுகிறது. இதனை இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மேலும் அந்த டிவிட்டில் நேசமணிக்காக நாம் பிராத்தனை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்த நாளில் இளையராஜா வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு