Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த நாளில் இளையராஜா வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

Advertiesment
இளையராஜா
, திங்கள், 3 ஜூன் 2019 (08:00 IST)
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி நேற்று சென்னை பூந்தமல்லி அருகே இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றது. இதில் எஸ்பிபி, ஜேசுதாஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்து கொண்டு இசைராஜாவின் பாடல்களை பாடினர்.
 
இந்த நிலையில் இந்த விழாவில் இசைஞானி இளையராஜா ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடத்தை சொந்த செலவில் கட்டித்தர இருக்கிறேன் என்று அவர் அறிவித்தவுடன் அரங்கில் இருந்தவர்களின் கரவொலி விண்ணை பிளந்தது. இந்த அறிவிப்புக்கு திரையிசை கலைஞர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
 
 தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டட பிளான் தயாராக இருப்பதாகவும் விரைவில் இந்த கட்டிடத்தின் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாபில் பரவும் தமிழ் பாடல் .. ஏ.ஆர். ரஹ்மானுக்குக் குவியும் பாராட்டுக்கள்