Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுப்பர் டீலக்ஸ் தெலுங்கு டப்பிங்… ஆஹா ஓடிடியில் வெளியீடு!

சுப்பர் டீலக்ஸ் தெலுங்கு டப்பிங்… ஆஹா ஓடிடியில் வெளியீடு!
, புதன், 28 ஜூலை 2021 (11:29 IST)
விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதுவரை இயக்கி இருப்பது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை உலகில் உள்ளவர்களே அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். மொத்தத்தில் அறிவுஜீவிகளுக்கான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற அவரின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து இப்போது இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமான ஆஹாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமீர்கான் படத்தில் நடிக்க இருந்த டேனியல் கிரேக்… ஜேம்ஸ்பாண்ட் ஆனதால் நடக்காத சோகம்!