Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா… உருவாகும் ஹாரர் வெப் சீரிஸ்

விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா… உருவாகும் ஹாரர் வெப் சீரிஸ்
, புதன், 28 ஜூலை 2021 (10:55 IST)
விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள வெப் சீரிஸில் நாக சைதன்யா நடிக்க உள்ளாராம்.

விக்ரம் குமார் தமிழில் தம், யாவரும் நலம்  மற்றும் 24 ஆகிய படங்களை இயக்கியவர். அதே போல தெலுங்கில் அவர் இயக்கிய மனம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவரை முன்னணி இயக்குனராக்கியது. இதையடுத்து அவர் நானியை வைத்து கேங் லீடர் எனும் படத்தை இயக்கினார். படம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் ஹாலிவுட் படமான விடோஸை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது என்ற எதிர்விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் இப்போது நாக சைதன்யாவை வைத்து தேங்க்யு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் முடிந்ததும் ஓடிடிக்காக ஒரு புதிய வெப் சீரிஸை உருவாக்க உள்ளாராம். இது அவரின் ஹிட் படமான யாவரும் நலம் பாணியிலான ஒரு ஹாரர் சீரிஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு சினிமாவின் மோஸ்ட் வாண்டட் நடிகரான சமுத்திரக்கனி!