Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

இவங்களுக்கும் டிஸ்கவரி சேனலுக்கும் என்ன சம்பந்தம்?

Advertiesment
சன்னி லியோன்
, ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (12:46 IST)
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது டிஸ்கவரி சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்க உள்ளார்.

 
பாலிவுட்டில் தனது கவர்ச்சி நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள சன்னி லியோன் சர்ச்சையான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது சினிமா, விளம்பரம் ஆகியவை கடந்து டிவி நிகழ்ச்சியிலும் கலக்க உள்ளார்.
 
சன்னி லியோனுக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து சன்னி லியோன் கூறியதாவது:-
 
டிஸ்கவரி ஜீத் சேனலில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கயிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது என்னை மிகவும் பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கும். மேலும் நான் தொகுத்து வழங்குவதன் மூலம் பலரையும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க முடியும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லியின் அடுத்த பட டைட்டில் 'ஆளப்போறான் தமிழன்': மீண்டும் விஜய் படமா?