Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலிவுட்டுக்காக சன்னி லியோன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Advertiesment
சன்னி லியோன்
, புதன், 13 டிசம்பர் 2017 (13:13 IST)
கனடா  நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன் தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகவே மாறி விட்டார்.
சன்னி லியோனுக்கு தென் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பாலிவுட்டை அடுத்து தமிழை குறி வைத்து களம் இறங்கியிருக்கிறார் சன்னி லியோன். ஏற்கெனவே வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன் இப்போது கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார். பொட்டு வடிவுடையான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சன்னி  லியோன். 
 
தமிழில் படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். சரி சம்பளம் எவ்வலவு தெரியுமா? இதுவரை பாலிவுட்டுக்காக பெரிய அளவில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சன்னி லியோன் தமிழுக்காக தனது சம்பளத்தை அதிரடியாகக் குறைத்திருக்கிறாராம். அறிமுகமாகும் படத்துக்கு ஒரு கோடி கேட்டவர் பின்னர் 80 லட்சத்துக்கு ஓகே சொன்னதாக தகவல்கள்  கூறுகின்றன. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று ஐந்து மொழிகளில் மார்க்கெட் இருப்பதால்  இந்த சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள். இந்த செய்தி பல முன்னணி ஹீரோயின்களுக்கு கிலியை  ஏற்படுத்தியுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளுக்காக மட்டும் இதை செய்வேன்; சிவகார்த்திகேயன் பேச்சு