தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்னர் டிசம்பர் மாதத்தில் ஒரு டெஸ்ட் ஷூட் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.