Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுந்தர் சி- ன் ''தலைநகரம் -2'' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

thalainagaram 2
, வியாழன், 15 ஜூன் 2023 (20:04 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் வி.இசட். துரை. இவர் அஜித் நடிப்பில் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா, நேபாளி, 6 கேண்டில்ஸ் ,ஆகிய படங்களை அடுத்து இவர் தற்போது இயக்கியுள்ள படம் தலை நகர் -2.

இவர் இயக்கத்தில், சுந்தர் சி  நடிப்பில், கடந்த   2006 ஆம் ஆண்டு தலைநகரம்  முதல் பாகம்  வெளியானது. வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட்டாக இந்த படத்துக்கு அமைய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து சுந்தர் சி வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், வி.இசட் துரை இயக்கத்தில் இருட்டு படத்திற்குப் பின்  இப்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த ஆண்டே இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் ஜூன் 23 ஆம் தேதி தலை நகரம் -2 படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளது.

இது வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் அம்மாவுக்கு இதே நிலைமை தான்... ரோபோ சங்கரை நினைத்து உருகிய வனிதா!