அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

Mahendran
புதன், 30 ஜூலை 2025 (18:03 IST)
நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது. ஆனால், 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில், கிட்டத்தட்ட ரூ.100 கோடி செலவில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்தச் சூழலில், படத்தின் டிரைலரை சுந்தர்.சி தயார் செய்து தயாரிப்பாளரிடம் காட்டியதாகவும், அந்த டிரைலரை பார்த்து தயாரிப்பாளர் மிரண்டுவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான தகவல் பரவி வருகிறது.
 
இருப்பினும், "இப்போது இந்த டிரைலரை வெளியிட வேண்டாம். தீபாவளிக்குப் பின் அல்லது அடுத்த ஆண்டு வெளியிட்டு கொள்ளலாம்" என்று தயாரிப்பாளர் அறிவுறுத்தியதாகவும், சுந்தர்.சி அதைப் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
எனவே, அடுத்த ஆண்டு வெளியாக போகும் டிரைலரை இப்போதே சுந்தர்.சி தயார் செய்து விட்டதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எது நடந்ததோ அது….. நன்றாகவேவா? நடந்தது.. கரூர் சம்பவம் குறித்து இயக்குனர் பார்த்திபன்..

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments