கோடை விடுமுறையைக் குறிவைக்கும் சுந்தர் சி யின் ‘கேங்கர்ஸ்’!

vinoth
செவ்வாய், 4 மார்ச் 2025 (10:13 IST)
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டுவெளியான அரண்மனை 4 படமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான ‘மத கஜ ராஜா’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போட்டுவிட்டு வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தை முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது மூக்குத்தி அம்மன் 2 பட வேலைகளில் சுந்தர் சி பிஸியாக உள்ளார். இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமலுடன் கடைசி படம்.. சினிமாவில் இருந்து ஓய்வு பெற ரஜினி முடிவா?

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments